"நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்" - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

 
mk stalin mk stalin

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

school

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  இன்று வெளியாகியுள்ளது. அதன்படி தேர்வு எழுதிய 8.17 லட்சம் பேர் பேரில், 7,55,451 பேர் தேர்வு பெற்று,  94.03 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில்  மாணவிகள் 4,05,753 பேரும், மாணவர்கள் 3,49,697 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.38% ஆகவும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 91.45 ஆகவும் பதிவாகியுள்ளது. அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் மிக முக்கியக் கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

இந்த முறை தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளர வேண்டாம். வெற்றிக்கு இன்னும் ஒரு அடிதான். நீங்களும் விரைவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நமது அரசு 'நான் முதல்வன் திட்டம்' உள்ளிட்ட திட்டங்களை உங்கள் உயர்கல்விக்கு வழிகாட்ட வகுத்திருக்கிறது.

நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்! உலகை வெல்லுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.