+2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!

 
result result

12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12ம் வகுப்பு ஆண்டு இறுதி தேர்வுகள் தான் மாணவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் எனமொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர். இந்த தேர்வானது கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு தேர்வு தாள் திருத்தும் பணியானது நடைபெற்று வந்த நிலையில் கடந்த வாரத்தோடு முழுவதுமாக பணிகள் முடிவடைந்தது. தினையடுத்து 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மே 9ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருநாள் முன்கூட்டியே வெளியாகிறது.