மாணவர்களை விஞ்சி வரும் பெண் தெய்வங்களுக்கு எனது வாழ்த்துகள் - ராமதாஸ்

 
pmk

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெண் தெய்வங்களின் சாதனைகள் தொடருவதற்கு  வாழ்த்துகள் என்று ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.  அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 

tn

வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக எண்ணிக்கையில்  தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92.37% ஆக உள்ள நிலையில்,  பெண் தெய்வங்களான மாணவிகளின்  தேர்ச்சி விகிதம் 96.44% ஆக அதிகரித்திருக்கிறது.  நினைவு தெரிந்த நாளில் இருந்து  தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களை விஞ்சி வரும்  பெண் தெய்வங்களுக்கு எனது வாழ்த்துகள்.



தேர்ச்சி விகிதத்தில் பெண் தெய்வங்களை வெல்ல மாணவர்கள்  கடுமையாக முயற்சிக்க வேண்டும். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.