திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் - தி.மலை மாவட்ட கல்வி அலுவலர் சஸ்பெண்ட்!!

 
ttn

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தி.மலை மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடத்திற்கான வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியானது, இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள், நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  அத்துடன் துறை ரீதியாக இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா  உத்தரவிட்டார்.

dpi

 இந்த சூழலில் 12ஆம் வகுப்பு வணிகவியல் தேர்வுக்கான வினாத்தாள் நேற்று வெளியானது. அதேபோல் இன்று பன்னிரண்டாம் வகுப்பு வணிக கணிதம் வினாத்தாள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயார் செய்யப்பட்டு  மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும்  நிலையில் வினாத்தாள்கள் தொடர்ந்து வெளியாகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

tn

இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்தது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பிலிருந்து அருள்செல்வன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியாவுக்கு , திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு கூடுதலாக ஒப்படைத்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.