10, 12ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதலிடம் பிடித்த மாவட்டங்கள் - சென்னை தேர்ச்சி விகிதம்!!

 
tn

10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.  12ம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும், 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு ஜூலை ,ஆகஸ்ட்டில் துணை தேர்வுகள் நடத்தப்படவுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர்.  10ம் வகுப்பில் மொத்தம் 9,12,620 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 8,21,994மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

dpi building

10ம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:

கன்னியாகுமரி, 97.22%

பெரம்பலூர் 97.12%
விருதுநகர் 95.96%

12ம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:

பெரம்பலூர் 97.95%
விருதுநகர் 97.27%
ராம்நாடு: 97.02%

school

இந்நிலையில் சென்னை மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் என்பது 10ஆம் வகுப்பில்  88.76%ஆகவும்  , 12ஆம் வகுப்பில் 93.99% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதமானது  10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 886 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், 246 அரசுப்பள்ளிகளில் 100% மாணவர்கள்பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  10 வகுப்பு மொழி பாடத்தில் ஒருவர் மட்டும் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். 12ம் வகுப்பு மொழித் தேர்வில் 47 பேர் 100 மதிப்பெண்கள்  பெற்றுள்ளனர். 12ம்  பொதுத்தேர்வில் 97.95% பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது .10ம் வகுப்பில் 97.22% தேர்ச்சியுடன் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது வேலூர் மாவட்டம் .79.87% தேர்ச்சி மட்டுமே பெற்று கடைசி இடத்தை பெற்றுள்ளது.