13 வயது சிறுமி 6 மாதம் கர்ப்பம்- விரக்தியில் தாய், தந்தை தற்கொலை

 
suicide suicide

திண்டுக்கல் சின்னாளபட்டி அருகே 13 வயது சிறுமி 6 மாதம் கர்ப்பமானதால் விரக்தியில் தாய், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வழிகள்!

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்த நிலையில் 13 வயது சிறுமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது அவர் கர்ப்பமாக இருந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

suicide

இதுகுறித்து தன் மகளிடம் கேட்ட போது உறவினர் ஒருவர் தன்னை வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து குழந்தையின் தாய் தரப்பில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில், சிறுமி புகார் அளித்த உறவினர் டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது சிறுமியின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சிறுமி 6 மாத கர்ப்பிணியானதற்கு தந்தையும் காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் சிறுமியின் இறந்த தந்தையின் டி.என்.ஏ எடுத்து காவல்துறையினர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமி கர்ப்பம் தொடர்பாக தாய்  இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.