2,643 பேருந்துகளில் 1,32,150 பேர் பயணம் - போக்குவரத்துத்துறை தகவல்!

 
bus bus

2,643 பேருந்துகளில் 1,32,150 பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

bus

வார இறுதி நாட்களில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை மற்றும் கல்வி பெற்று வரும் நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.  அந்த வகையில் வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் செல்வர். இந்த சூழலில் வார இறுதி நாட்கள் மற்றும் சுதந்திர தின விடுமுறை என தொடர் விடுமுறை என்பதால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

omni bus

இந்நிலையில் வார இறுதி விடுமுறை மற்றும் சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காக நேற்று சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்குத் தினசரி இயக்கக்கூடிய 2100 பேருந்துகள் உடன் கூடுதலாக 543 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. 2,643 பேருந்துகளில் 1,32,150 பேர் பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.