அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.472 சரிவு..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 472  குறைந்திருக்கிறது..   

சர்வதேச பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை காரணமாக, தங்கத்தின் விலை அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  தங்க  முதலீடு  சிறந்த சேமிப்பாகவும், லாபகரமானதாகவும் பார்க்கப்படுகிறது.   இதுவே  தங்கத்தின் விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.  ஒரு நாள் விலை குறைவதும், அடுத்தநாள் விலை அதிகரிப்பதுமாக இருந்து வரும் தங்கம் விலை, இந்த வார தொடக்கத்தில் சரிவை சந்தித்து வந்தது.  நேற்று எதிர்பாராத விதமாக திடீரென உயர்ந்த தங்கம் விலை, இன்று அதிரடியாக குறைந்திருக்கிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !

இந்நிலையில் சென்னையில் கடந்த  வார இறுதியில் ( மே 7 ஆம் தேதி)  தங்கம் விலை அதிரடியாக  39, ஆயிரத்தை தாண்டி விற்பனையானது .  அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.4,877க்கும்,   ஒரு சவரன்  ரூ. 39,016  க்கும்  விற்பனையானது.  அதன்பிறகு இந்த வாரம் தொடர்ந்து குறைந்துவந்த தங்கம்,  நேற்று  முன்தினம் சவரனுக்கு ரூ.  ரூ. 472  குறைந்தும்   ஒரு சவரன் தங்கம் ரூ. 38,296 க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஆனால் நேற்றைய தினம் சவனுக்கு ரூ. 270 ரூபாய் அதிகரித்தது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 59  ரூபாய் குறைந்து,   ஒரு கிராம் ரூ.  4,764  க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சவரனுக்கு ரூ. 472குறைந்து,  8 கிராம் கொண்ட  ஒரு சவரன் ஆபரணத் தங்கம்   ரூ. 38,112 க்கு  விற்கப்படுகிறது.   அதேபோல்  வெள்ளி விலையும் குறைந்திருக்கிறது.   சென்னையில் நேற்று 65  ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி விலை, இன்று  63 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது.   ஒரு கிலோ வெள்ளி 63 ஆயிரத்து 400  ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.