சென்னை உயர்நீதிமன்றத்தில் 1,412 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

 
high court


சென்னை  உயர்நீதிமன்றத்தில்   காலியாக உள்ள  நகல் பரிசோதகர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்  , கட்டளை எழுத்தர்  , ஒளிப்பட நகல் எடுப்பவர் , Lift Operator, Process Server , Reader உள்ளிட்ட 1,412 பணியிடங்கள் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப் பணிக்கு  விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இன்றைக்குள் விண்ணப்பிக்க  வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 மொத்த காலிப்பணியிடங்கள்  - 1,412

நகல் பரிசோதகர் (Examiner)    -    118
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailifr) - 302
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff) - 574
கட்டளை எழுத்தர் (Process Writer) - 3
ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)  - 267

லிஃப்ட் ஆபரேட்டர் (Lift Operator) - 9
Process Server - 41
Reader - 39

வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி :   எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   உயர்படிப்புகளில் சேர்வதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி.

Xerox Operator பதவிக்கு மட்டும் கூடுதலாக ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் 6 மாதங்களுக்கு முன்னனுபம் இருக்க வேண்டும்.

ஓட்டுநர் பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் -   22.08.2022 ( இன்று)

தேர்வுக் கட்டணம் - ஓட்டுநர் பதவிக்கு: ரூ.50, மற்ற அனைத்து பதவிகளும்: ரூ.550 செலுத்த வேண்டும்.

ஆதிதிராவிடர்/ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

சொன்னா நம்புங்க! மார்ச் வரையிலான காலத்தில் வேலைவாய்ப்பு 7 சதவீதம் அதிகரிக்கும்…..

விண்ணப்பிக்கும் முறை  : ஆன்லைன் 

தேர்ந்தெடுக்கப்படும் முறை :   எழுத்துத் தேர்வு . (  பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு - 50 வினாக்கள்,  பகுதி – II, பொது அறிவு, திறனறிவு,  மனக்கணக்கு நுண்ணறிவு   - 100 வினாக்கள்)
 

 மேலும் விவரங்களுக்கு  :  https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_link1district=2_Tamil.pdf

https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/districtList.jsp?notificationLink=link1

விண்ணப்பிக்க  : http://https://www.mhc.tn.gov.in/recruitment/login