கோஷ்டி மோதலில் 12 பேர் படுகாயம்...144 தடை உத்தரவு பிறப்பிப்பு; போலீசார் அதிரடி!

 
ttn

பாபநாசம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 12 பேர் படுகாயம் அடைந்ததால் திருவைக்காவூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவைக்காவூர் ஊராட்சியில் மணியாறு பாலம் உள்ளது. அதனருகில் கொடிக்கம்பம் வைப்பது தொடர்பாக இரு சமூகத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதை கண்டித்து ஒரு சமூகத்தினர் கடந்த 17-ஆம் தேதி மணி ஆறு பாலம் அருகே மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

144

அன்று இரவே மணியாறு பாலத்தில் இருதரப்பினருக்குமிடையே மோதல் வெடித்துள்ளது. ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி கொண்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் இருப்பு தரப்பினரையும் விலக்க முயற்சி செய்த போது,  தகராறில் ஈடுபட்டவர்கள் கற்களை எரிந்ததால் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உட்பட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. 

தகவல் அறிந்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தற்போது அங்கு ஆயுதப்படை போலீசாரும் அதிரடிப் படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றத்தை தணிக்கும் விதமாக திருவைக்காவூர் ஊராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.