ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா???

 
bank


ஜூலை மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

பணம் செலுத்துவது, எடுப்பது,  கடன்பெறுவது என பெரும்பாலும் பணத்தேவைக்காக மக்கள் வங்கியை நாடுவது வழக்கம்.. ஆனால்  வங்கிகளுக்கு   இரண்டாவது சனி ,ஞாயிற்றுக்கிழமை,  நான்காவது சனி,  மற்றும் மாநில விடுமுறைகள் , உள்ளூர் விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது . அந்தவகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. இதனால்  வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்யும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளலாம்.   

bank

அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான   விடுமுறை பட்டியலில் பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை என கணக்கிட்டு விடுமுறை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.    எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை பார்க்கலாம்.

ஜூலை 01 - (வெள்ளி): ரத யாத்திரை (ஒடிசா)
ஜூலை 03 -  ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 05 - (செவ்வாய்): குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள் (ஜம்மு & காஷ்மீர்)
ஜூலை 06 - (புதன்): MHIP நாள் (மிசோரம்)
ஜூலை 07 - (வியாழன்): கர்ச்சி பூஜை (திரிபுரா)
ஜூலை 09 - இரண்டாவது சனிக்கிழமை
ஜூலை 10 - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 11 - (திங்கள்): ஈத்-உல்-அதா

bank
ஜூலை 13 - (புதன்): தியாகிகள் தினம் (ஜம்மு மற்றும் காஷ்மீர்), பானு ஜெயந்தி (சிக்கிம்)
ஜூலை 14 - (வியாழன்): பென் டியன்க்லாம் (மேகாலயா)
ஜூலை 16 - (சனி): ஹரேலா (உத்தரகாண்ட்)
ஜூலை 17 -ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 23 - நான்காவது சனிக்கிழமை
ஜூகை 24  - ஞாயிற்றுக்கிழமை
ஜூலை 26 - (செவ்வாய்): கேர் பூஜா (திரிபுரா)
ஜூலை 31 - ஞாயிற்றுக்கிழமை .

ஜூலை மாதத்தில் 5 ஞாயிறு, 2 சனிக்கிழமை என வார இறுதி நாட்கள் விடுமுறை மட்டுமே 7 நாட்களாகும்..  அதன்படி பண்டிகை விடுமுறைகளை சேர்த்து ஜூலை மாதத்தில் 16 நாட்கள்  வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.