வேளாண் பட்ஜெட் 2023 - விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும்

 
coconut

விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 

2023-24ம் நிதியாண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். இநிலையில், 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.  
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னகன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும். விவசாயிகளுக்கு இலவசமாக 15 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்படும். வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.  வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2 ஆண்டுக்களில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.