ஆளுநர் ரவிக்கு கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் - 150 பேர் கைது!!

 
tn

மயிலாடுதுறையில் ஆளுநர் ரவிக்கு எதிராக  கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

tn

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும், இந்தி திணிப்பை கைவிட்டு அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழி, நீதி மொழி, நிர்வாக மொழியாக மாற்ற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. அதேபோல்  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள  தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த  நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில்,  ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டி விசிக, இடதுசாரி கட்சிகள், தி.க, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

tn

ஆதினம் நோக்கி ஆளுநர் சென்ற சாலையில் குவிந்த போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை காட்டியும் , கருப்புக்கொடி வீசியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர்களை  போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது .இதையடுத்து 150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.