"கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 150% சொத்து வரி உயர்வு" - டிடிவி தினகரன் கண்டனம்!!

 
ttv

150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

govt

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு கட்டணங்கள் மற்றும் வணிக வளாக கட்டிடங்களுக்கு சொத்து வரி 50 முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.  அத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 25% முதல் 50 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 13 லட்சம் பேர் சொத்து வரி மாநகராட்சிக்கு செலுத்தி வருகிறார்கள்.  600 சதுர அடி வரை  உள்ள குடியிருப்புகளுக்கு 25% முதல் 50 சதவீதமும்,  601 - 1200 சதுர அடி குடியிருப்புகளுக்கு 50 முதல் 75 சதவீதமும்,  1201 முதல் 1800 சதுர அடி குடியிருப்புகளுக்கு 75 முதல் 100 சதவீதமும்,  1801 முதல் ஒன்றுக்கு மேல் உள்ள குடியிருப்புகளுக்கு 100 முதல் 150 சதவீதமும் சொத்து வரி  உயர்த்தப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்து தரப்பினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட பிறகும் மக்கள் படும் இன்னலைப் பற்றி கவலைப்படாமல், கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 150 % சொத்து வரி உயர்வை அமல்படுத்தியிருக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக வீடுகள் தோறும் தி.மு.க அரசு அனுப்பியிருக்கும் நோட்டீஸ் சொத்து வரி உயர்வுக்கானது மட்டுமல்லாமல், தி.மு.க ஆட்சி இனி செய்யப் போகிற கொடுங்கோன்மைகளுக்கான எச்சரிக்கை மணியோ! என மக்கள் அஞ்சுகிறார்கள். இதனால்தான் முதலமைச்சர் திரு.ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட வேண்டியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.