ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நியூ இயர் ஹிப்ட்... 16 பேர் எஸ்பிக்கள் டிஐஜி-க்களாக புரமோஷன்!

 
ஸ்டாலின்

தமிழ்நாடு முழுவதுமே மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் புத்தாண்டு. கடந்தாண்டு தான் கொரோனாவோடு கழிந்துவிட்டது. இந்தாண்டாவது சரியாக செல்ல வேண்டும் என அனைவரும் 2022ஆம் ஆண்டை இன்முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "2ஆவது அலையை கட்டுப்படுத்துவது தான் எனது முதல் வேலையாக இருந்தது. என்னுடன் அமைச்சர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறையினர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் இணைந்து நின்று செயல்பட்டார்கள். அதை மறக்கவே முடியாது” என்று கூறினார். 

ஸ்டாலின்

தற்போது காவலர்களை புத்தாண்டில் குஷி படுத்தும் விதமாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் துறையை உள்ளடக்கிய உள்துறை முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும்  சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, கியூ பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவைச் சேர்ந்த 208 உதவி ஆய்வாளர்களுக்கு (எஸ்ஐ) இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து உள்துறை உத்தரவிட்டிர்ந்தது. இதற்கான ஆணையை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று பிறப்பித்திருந்தார்.

இச்சூழலில் இன்றும் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் காவல் ஆணையரகம் திறக்கப்பட்டது. இதற்கான ஆணையர்களாக ரவி ஐபிஎஸ், சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு விட்டனர். தற்போது 2009ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த சி.விஜயகுமார், பி.விஜயகுமார் திஷா மிட்டல், சிபி சக்கரவர்த்தி, அபினவ் குமார் உள்ளிட்ட 16 காவல் கண்காணிப்பாளர்களை டிஐஜிக்களாக பதவி உயர்வு செய்து உள்துறை செயலர் எஸ்கே பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.