ஓட்டுநர்களுக்கிடையே போட்டி....கவிழ்ந்த பள்ளி வேன் - 16 மாணவர்கள் காயம்

 
van accident

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக அதிவேகமாக சென்ற தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 மாணவர்கள் காயமடைந்த நிலையில், ஓட்டுநர்களின் செயலை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

காலாண்டு விடுமுறையை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இரண்டாவது நாளாக இன்று பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோபாலபுரத்தில் சுமார் 20 பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு தனியார் பள்ளி வேன் ஒன்று பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், அப்போது மற்றொரு பள்ளி வேன் அந்த வழியாக வந்த நிலையில், இரு ஓட்டுநர்களுக்கும் யார் முந்தி செல்வது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தாருமாறாக வேனை ஓட்டிச் சென்ற நிலையில், ஒரு வானம் மற்றொரு வாகனத்தின் பக்கவாட்டில் மோதியதில், தனியார் பள்ளி வேன் ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 16 பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் குவிந்த கிராம மக்கள் ஓட்டுநர்களின் செயலை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.