கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என்.நேரு

 
tn

மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து டெல்டா மாவட்ட குறுவை  நெல் சாகுபடிக்காக கல்லணையிலிருந்து 1600 கான அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

tn

டெல்டா மாவட்ட குருவை பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் அமைச்சர் கே.என். நேரு. கல்லணையில் நீர் திறக்கும் விழாவில் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள்  ,விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர், நீர் திறப்பால் 5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

tn

நீர்  திறப்பால் தஞ்சாவூர் ,மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்லணையில் தண்ணீர் திறந்து விட்டதன் வாயிலாக 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். அத்துடன் சம்பா,  தாளடியும் சேர்த்தால் சுமார் 18 லட்சம் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி எனும் முப்போக நெல் சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை திறந்து திறக்கப்படுவது வழக்கம். அதன்படி  டெல்டா பாசனத்திற்காக கடந்த 12ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேட்டூர் அணையை  திறந்து வைத்த நிலையில் தண்ணீரானது மாயனூர் கடந்து முக்கொம்பை அடைந்து கல்லணைக்கு  நேற்று இரவு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.