"தீபாவளிக்கு 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன" - அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!!

 
BUS

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

bus

வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது . இதன் காரணமாக பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் . இதனால் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் குரோம்பேட்டையில் புதிதாக 17 வழித்தடங்களில் அரசு மாநகரப் பேருந்து போக்குவரத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார் . இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய பேச்சுவார்த்தை அடுத்த மாதம் தொடங்கும்.  

bus

கடந்த ஆட்சியில் 12 ஆயிரம் பேருந்துகள்  மட்டுமே இயக்கப்பட்டது.  ஆனால் திமுக ஆட்சியில் 17,000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.  4 ஆயிரம்  புதிய மற்றும் நிறுத்தப்பட்ட சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் 6 இடங்களில் இருந்து  16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.  மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17000 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள்  இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.