ECR-ல் ஆறு வழிச்சாலை - மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி!!

 
tn

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும்  என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2022 -23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.  கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு திருத்தி நிதிநிலை அறிக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று முழு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வித்துறை, உயர் கல்வித்துறை, வனத்துறை ,சமூகத் துறை உள்ளிட்டவற்றிற்கு துறைவாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் , உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ படிப்பைத் தொடர தேவையான உதவிகளை அரசு வழங்கும்  என்றார். அத்துடன் நிதிநிலை அறிக்கையின் முக்கிய அப்டேட் இதோ:-

*அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக ரூ.1300 கோடி வழங்கப்படும்.

*இலவச வேளாண் மின் இணைப்புகளுக்கு முன்னுரிமை; இதுவரை 75,765 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; எஞ்சிய இணைப்புகளும் விரைவில் வழங்கப்படும்

*மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை அரசே ஏற்கும்; இதற்காக ரூ.13,108 கோடி நிதி ஒதுக்கீடு

*பழங்குடியினருக்கு 1000 புதிய வீடுகள்

*6  புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்; விளிம்பு நிலையில் இருக்கும் இருளர் போன்ற பழங்குடி தமிழர்களுக்கு ரூ.20.7 கோடி மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்ட அரசு அனுமதி

eb

*மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் தூரத்துக்கு இரு புறங்களிலும் பெருவழி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் 

*வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு 7 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு

*பேரிடரை முன்கூட்டியே அறிந்து சொல்ல புதிய தொழில்நுட்பங்களுக்கு ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு

*வெள்ளத் தடுப்பு நடவடிக்கை களுக்கு 500 கோடி ஒதுக்கீடு

*கால்நடை பராமரிப்பு துறை க்கு ஆயிரத்து 315 கோடி நிதி ஒதுக்கீடு

*குறுவை சாகுபடியை சிறப்பாக மேற்கொள்வதற்காக 10 மாவட்டங்களில் 80 கோடி ரூபாய் செலவில் 4,966 கிலோ மீட்டர் கால்வாய் சீரமைக்கும்

*மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.17,901.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

chennai

*சென்னைக்கு அருகில் ₹300 கோடியில் தாவரவியல் பூங்கா!

*கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட மதுரவாயல் - துறைமுகம் மேம்பாட்டு சாலை திட்டத்தை செயல்படுத்த ₹5770 கோடி ஒதுக்கீடு

*பருவ மழைக்காலங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்குவதால் போக்குவரத்து துண்டிப்பு; ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக்கப்படும்

*சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்

*சமூக நலத்துறைக்கு ரூ.5922.40 கோடி நிதி ஒதுக்கீடு

*சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு

tn

*மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.838.01 கோடி ஒதுக்கீடு

*கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு

*கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி  ஒதுக்கீடு

*சிங்கார சென்னை திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு

*துறைமுக நகரங்கள் திட்டத்துக்கு 1,825 கோடி ஒதுக்கீடு

tn

*மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு

*இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை  60% ஆக உயர்வு

*கயிறு உற்பத்தித் தொழிலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது; மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை பிரபலப்படுத்த தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கோவையில் அமைக்கப்படும், முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு.

*புலம்பெயர் தொழிலாளர்கள் தேவை அதிகரித்து வருகிறது; அரசு நலத்திட்ட பயன்கள் அவர்களை சென்று சேர நடமாடும் தகவல் உதவி மையங்கள் அமைக்கப்படும் 

*தாம்பரம், கும்பகோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளை மேம்படுத்த தலா 10 கோடி என 60 கோடி ஒதுக்கீடு

*சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை