தவெக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தமிழக வெற்றி கழக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்று வருகிறது.தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலான்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 2,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு, இரு மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு, பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க கூடாது, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.