முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகள் ரத்து!!

 
stalin

அதிமுக ஆட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18   அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வரின் செயல்பாடுகள், டெண்டர் முறைகேடு, ஊழல், வாக்கி டாக்கி கொள்முதல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அப்போதைய திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான  மு.க. ஸ்டாலின் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் மு.க .ஸ்டாலினுக்கு எதிராக 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் தமிழக அரசால் தொடங்கப்பட்டது தொடரப்பட்டது.அத்துடன் முரசொலி ஆசிரியர் செல்வம், கலைஞர் டிவி ஆசிரியர் திருமாவேலன் ஆகியோர் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் மீதானவிசாரணை  எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. தன்மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஸ்டாலின் தரப்பில் மனு தாக்கல் செய்த நிலையில் மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஏற்கனவே தடை விதித்திருந்தது.

stalin

இந்த சூழலில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வரும் நிலையில் இன்றைய அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளை திரும்பப் பெற்று அரசாணை பிறப்பித்தது. அதேபோல ஸ்டாலினுக்கு எதிராக தொடுக்கப்பட்ட 18 அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப் பெற்ற தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

stalin

இந்நிலையில்  திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுக்கு எதிராக தொடுக்கப்பட்ட 18 அவதூறு வழக்குகளும் திரும்பப்  பெற்ற அரசாணை குறித்து  கடந்த விசாரணையின்போது நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதி நிர்மல்குமார் இன்று,  ஸ்டாலின் மீதான வழக்குகளை திரும்பப் பெற்ற அரசாணையை ஏற்று,  ஸ்டாலின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்று, அவர் மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.