சென்னையில் 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை....காரணம் இதோ!

 
tasmac

காந்தி ஜெயந்தி மற்றும் மிலாது நபியை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் சுதந்திரன் தினம், குடியரசு தினம், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாது நபியை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:- அடுத்த மாதம் 2-ந்தேதியன்று காந்தி ஜெயந்தி மற்றும் 9-ந்தேதியன்று மீலாது நபி ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப்புகளை சார்ந்த பார்கள், ஓட்டல்களை சேர்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.