பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- 2 பேர் பலி..!!
Apr 5, 2026, 14:36 IST1775379972416
கோழிக்கோட்டை அடுத்த செவாயூர் குரிக்கத்தூர் பகுதியில் ஒரு வீட்டில் சிலர் பட்டாசு தயாரித்து வந்தனர். அனுமதி பெறாமல் அவர்கள் இந்த தொழிலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இந்த வீட்டில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதில் அங்கு பணியில் இருந்த ராகுல் (வயது 26) மற்றும் அவரது மைத்துனரான மற்றொரு ராகுல் (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் விஷ்ணு (28) அவரது மனைவி சினி (27) மற்றும் ஹிஜித் (36) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

