வேடசந்தூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகேயுள்ள கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாறைகளை உடைக்க பயன்படுத்தும் வெடிகளை வைத்து பாறைய உடைப்பதற்காக வெடிகளை தயார் செய்து வைத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் திடீரென அந்த வெடி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதில் நாராயணன் மற்றும் மேத்யூ ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கோபால், மாரியப்பன் ஆகிய இருவர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்த்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.