அரசு வேலை வாங்க தமிழ்நாடு அரசே கொடுக்கும் 2 பயிற்சிகள்... ரூ.30,000 சம்பளத்தில் வேலை..!

 
1

ஆதிதிராடவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கக்கூடிய வகையில் சோலார் பேனல் பொருத்தும் தொழில்நுட்ப பயிற்சியும் வழங்கப்பட இருக்கிறது. இந்த இரு பயிற்சிகள் குறித்த கூடுதல் தகவல்களை விரிவாக பார்க்கலாம். 

1. தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி" 20.02.2026 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும்.

பயிற்சியில் என்னென்ன விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்?

Advertisement

இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதலை தெரிந்து கொள்வீர்கள். கேரட் மதிப்பீடுகள், ஆசிட் சோதனை, எடை அளவு இணைப்பான் கற்றுக்கொடுக்கப்படும். மேலும், விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate), ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும்நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும். ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள், தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.

அரசு வேலை வாய்ப்பு வழிகாட்டல்

இதைத் தொடர்ந்து இந்த பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழிகாட்டலும் கொடுக்கப்படும். பொதுத்துறை, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள், மத்திய, மாநில அரசுகள் அரசு கடனுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும். 

இப்பயிற்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 8668100181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: 

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை – 600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

2. சோலார் பேனல் பொருத்தும் தொழில்நுட்ப பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Solar Panel Installation Technician training) பயிற்சி வழங்கப்படவுள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி (Solar Panel Installation Technician training) பயிற்சி வழங்கப்படவுள்ளது.

யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களகாவும் 18 முதல் 32 வயது வரை நிரம்பி இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 க்குள் இருக்க வேண்டும். பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் படிப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி காலம் 45 நாட்கள் ஆகும்.

மாத சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழக அங்கீகார சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.18,000/- முதல் ரூ.30,000/- வரை கிடைக்க வழிவகை செய்யப்பபடும். வேலைவாய்ப்பினை விரும்பாத இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்குவதற்கு தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும்.

இப்பயிற்சி பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரில் விண்ணப்பிக்கலாம். மேலும் சென்னை உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி உணவுக்கான செலவினம் டாக்டர் ரெட்டி நிறுவனம் மூலமாக ஏற்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர் கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்