தாயின் அலட்சியத்தால் பறிபோன உயிர்- தண்ணீர் வாளியில் தலைக்குப்புற கிடந்த 2 வயது குழந்தை!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டு குளியல் அறையில் வைக்கப்பட்டிருந்த வாலி தண்ணீரில் தலை கீழாக விழுந்து இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலியானது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது வழிவிடு முருகன் கோவில். இக்கோவிலின் பின்புறம் வசித்து வருபவர் சுரேஷ்குமார் - வைதேகி தம்பதி. இவர்களது மகள் கிருத்வீகா முத்ரா (வயது 2). சுரேஷ்குமார் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் மனைவியும் குழந்தையும் இருந்துள்ளனர்.
சுரேஷ்குமாரின் மனைவி வைதேகி பக்கத்து தெருவில் பால் வாங்க குழந்தையை வீட்டில் தனியாக விட்டு சென்றிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது இரண்டு வயது மகள் வீட்டு பாத்ரூமில் வாலியில் இருந்த தண்ணீரில் தலைகீழாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி நத்தம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர், முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனையில் மருத்துவர் குழந்தையை பரிசோதித்தபோது இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. குழந்தையை பிரேத பரிசோதனைக்காக வைத்தனர்.
இது தொடர்பாக சுரேஷ்குமார் நத்தம் பட்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்த அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு வயது குழந்தை இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வயது குழந்தை பாத்ரூமில் இருந்த வாலியில் விழுந்து இறந்த சம்பவம் நத்தம்பட்டி பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


