சென்னையில் நிதி நிறுவனம் 200 கோடி மோசடி; மனைவி, மகள் கைது -அதிபர் தலைமறைவு

 
t

சென்னையில் 200 கோடி ரூபாய் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் அதிபர் தலைமறைவாகி இருக்கிறார்.  அவரின் மனைவியும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

 கடந்த 1975 ஆம் ஆண்டில் இருந்து சென்னை செம்பியன் பாரதி சாலையில் தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.   48 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் வருடத்திற்கு 12% வட்டி தறுவதாக சொல்லி பொது மக்களை ஈர்த்திருக்கிறது .  இதனால் பொதுமக்கள் 200 கோடி வரைக்கும் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். 

e

 கடந்த ஏழு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு அசல் தொகையையும் வட்டித் தொகையையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்திருக்கிறார்.   இதனால் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து நிறுவனத்திடம் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டு இருக்கிறார்கள்.   பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததால் பாதிக்கப்பட்டு நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்திருக்கிறார்கள்.

es

 200க்கும் மேற்பட்டோர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசிலும் புகார் அளித்திருக்கிறார்கள் .  இதை அடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நிதி நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி இருக்கிறார்கள் .  இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சொத்து பத்திரங்களை போலீசார் பறிமுதல்  செய்துள்ளனர்.   இதன் பின்னர் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் உரிமையாளர் ஈஸ்வரப்பன் தலைமறைவாகிவிட்டார்.  அவரது மனைவி வசந்தி, மகள் சக்தி ஐஸ்வர்யா ஆகியோரை கைது செய்துள்ளனர்  போலீசார்.  மேலும் இந்த நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய ராஜன் கண்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

 மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.   அதே நேரம் தலைமறைவாக இருக்கும் நிதி நிறுவனத்தின் அதிபர் ஈஸ்வரனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.