208 நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்.. மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த முதல்வர்..
112 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 177 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி முதல்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 2023 ம் ஆண்டு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். மேலும், அடையாறு, சாஸ்திரி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தையும் திறந்து வைத்து நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.
மேலும், ரூபாய் 60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சியின் மூலமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்
📃 7.5.2022 அன்று சட்டமன்றத்தில், 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்றேன்.
— M.K.Stalin (@mkstalin) July 3, 2025
🏥 6.6.2023 அன்று, முதற்கட்டமாக, 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
இன்று இரண்டாம்கட்டமாக,
🩺 ரூ.52 கோடி செலவில் புதியதாக 208… pic.twitter.com/RSj9MCeSog
📃 7.5.2022 அன்று சட்டமன்றத்தில், 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்றேன்.
— M.K.Stalin (@mkstalin) July 3, 2025
🏥 6.6.2023 அன்று, முதற்கட்டமாக, 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
இன்று இரண்டாம்கட்டமாக,
🩺 ரூ.52 கோடி செலவில் புதியதாக 208… pic.twitter.com/RSj9MCeSog


