ஓபிஎஸ்-க்கு அனுப்பப்பட்ட தீர்மானங்கள் - அதிமுகவின் வரவு செலவு அறிக்கை ஒப்படைப்பு!

 
admk

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் ஓபிஎஸ்-இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

ops

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகியுள்ளது.  அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. அத்துடன் அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மனு அளித்திருந்தார். தனிப்பட்ட முறையில்உள்ளரங்கில் கூட்டம் நடத்தப்படுவதால் அதற்கு தடைவிதிக்க முடியாது என்று  ஆவடி காவல் ஆணையரகம் விளக்கமளித்துள்ளது.

eps ops
இந்நிலையில் அதிமுக பொதுக் குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் ,அவற்றில் ஒற்றை தலைமை தீர்மானம் இடம்பெறவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 தீர்மானங்கள் ஒப்புதலுக்காக  ஓ பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் அதிமுகவின் வரவு செலவு அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொதுக்குழுவிலும் கட்சியின் ஆண்டு வரவு செலவு கணக்கை பொருளாளர் வாசிப்பார்.  அதன் அடிப்படையில் வரவு செலவு கணக்கு குறித்த தகவல்கள் ஓபிஎஸ் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.