"23 நாட்கள் அரசு விடுமுறை" அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழக அரசு!!

 
govt

தமிழகத்தில் அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

stalin

தமிழகத்தில் திமுக அரசு புதிதாக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வரும் நிலையில் வருகின்ற 2022 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் , திருவள்ளுவர் தினம் ,உழவர் திருநாள், தைப்பூசம், குடியரசு தினம் உள்ளிட்ட நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு, தெலுங்கு வருட பிறப்பு, தமிழ் புத்தாண்டு /டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்/ மகாவீரர் ஜெயந்தி, புனித வெள்ளி ,மே தினம் ,ரம்ஜான், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, ஆயுதபூஜை, விஜயதசமி, மிலாதுன்  நபி,  தீபாவளி,  கிறிஸ்துமஸ் ஆகிய 23  நாட்கள் பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

tn govt

இதில் உழவர் திருநாள், மே தினம், பக்ரீத், காந்திஜெயந்தி ,மிலாதுன்  நபி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு திமுக,  அதிமுக ஆட்சியில் மாறி மாறி கொண்டாடப்பட்டு வருகிறது.  தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்த நிலையில்,  அதிமுக அரசு சித்திரை 1ம் தேதியே  தமிழ் புத்தாண்டு என்று கடைப்பிடித்து வந்தது. தற்போது மீண்டும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் தமிழ் புத்தாண்டு இந்த ஆண்டு மாற்றப்படுமா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில்,  சித்திரை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டு என்றும் தை 1ஆம் தேதி பொங்கல் என்றும் தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.