100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து 23 லட்சம் பயனாளிகள் நீக்கம்! தமிழ்நாட்டில் அதிர்ச்சி

 
100 நாள் வேலை

100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.

தேர்தல் நேரத்தில் 100 நாள் வேலைத் திட்ட ஊதிய உயர்வு - தாக்கத்தை  ஏற்படுத்துமா?! | 100-day work plan wage hike, will it impact in election -  Vikatan


மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் 100 நாள் மூலம் ஓரளவு கிராமத்து ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமையைப் போக்கி, அன்றாட வாழ்க்கையை அவலமாக்காமல் தடுக்க உதவியது. இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஆண்டுக்கு ஆண்டு குறைத்ததால் அதற்கென இருந்த வாய்ப்புகளும் காணாமற்போனது. நடப்பு மத்திய பட்ஜெட்டில் கூட 100 நாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை.

இந்நிலையில் 100 நாள் வேலைத் திட்டத்திலிருந்து பல்வேறு காரணங்களால் 23,64,027 பயனாளிகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 6,19,310 பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக பீகார் - 4,56,004 பயனாளிகளும், சத்தீஸ்கரில் - 3,36,375 பயனாளிகளும் நீக்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.