நேற்றைய முகாமில் 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் தகவல்!

 
subramani

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 23 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


சென்னை ராணி மேரி கல்லூரி அருகில் போலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக போலியோ தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. போலியோ என்னும் கொடிய நோயை ஒழித்த பெருமை ரோட்டரி கிளப் அமைப்பை சேரும். தமிழகத்தில் நேற்று 50 ஆயிரம் முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 23 லட்சத்து 77 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 14 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இன்னும் தடுப்பு செலுத்திக் கொள்ள வேண்டியவைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றார்.

subramaniyan

தொடர்ந்து பேசிய அவர், முதல் தவணை தடுப்பூசி 69 சதவீதம் பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 29% பேர் செலுத்திக் கொண்டுள்ளனர். மிக விரைவில் தேசிய அளவிலான தடுப்பூசி இலக்கை எட்டுவோம். இன்று தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை முகாம்கள் வழக்கம்போல இயங்கும். தற்போது 43 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும் தெரிவித்தார்.