திமுக இளைஞரணி மாநாடு - 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

 
dmk

சேலத்தில் நடைபெற்ற திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டை காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியேற்றி வைத்தார். மாநில உரிமைகள் பறிப்பு, நீட் விலக்கு உள்ளிட்ட 22 தலைப்புகளில் சிறப்பு அழைப்பாளர்கள் உரையாற்றினர்.  

dmk

இந்த நிலையில், திமுகவின் இரண்டாவது இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன். ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்கிட வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தை சேரந்தவர்களுக்கு வேலை. மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட வேண்டும்.  மாநில சுய ஆட்சி அடிப்படையில் மாநில அரசின் அதிகாரத்தை வலிமைப்படுத்த வேண்டும்.  பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் தொடரும் ரெய்டுகளுக்கு கண்டனம்.  ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்.  மாநில பட்டியலுக்கு கல்வியை மாற்ற வேண்டும்.  பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு பதில் முதல்வர் செயல்பட வேண்டும்.  குலக்கல்வியை எதிர்த்து இளைஞரணி போராட்டம் தொடரும்.  வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ.6000 வழங்கிய முதல்வருக்கு நன்றி.  வரலாறு காணாத மழை நேரத்தில் மக்களை காத்த முதல்வருக்கு நன்றி.  கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.