270 கிலோ குட்கா பறிமுதல் : பெங்களூருவைச் சேர்ந்த முக்கிய சப்ளையர் கைது...

 
குட்கா பறிமுதல்

திருச்சங்கோட்டில் 270 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழகத்திற்கு குட்கா சப்ளை செய்து வந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு குட்கா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில்,   திருச்சங்கோடு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் அதிரடி வேட்டையில் இறங்கினர்.    சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் தோக்கவாடி பஸ் நிறுத்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆம்னி வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 270 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆம்னி வாகனத்தில் வந்த 4 பேரிடம் விசாரித்ததில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் பகுதியில் இருந்து  கொண்டு வந்து ஆங்காங்கே கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஆம்னி வாகனத்தில் வந்த பவானியை சேர்ந்த சதீஷ்குமார், ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், மோகன்ராஜ் பழனிச்சாமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்ததுடன், 270 கிலோ குட்கா மற்றும் ஆம்னி வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர் செந்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூரு சாம்ராஜ் குட்கா கைதுநகர் சேர்ந்த முகம்மது சுகில்  என்பவர் தமிழகம் முழுவதும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யும் முக்கிய சப்ளையராக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து  ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை பெங்களூருவுக்கு சென்று,  முகமது சைக்கிளை கைது செய்தனர்.  இதனையடுத்து குட்கா விற்பனை செய்து வந்த முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படையினருக்கு  நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சரோஜ் குமார் தாகூர் பாராட்டுக்களை தெரிவித்தார்.  மேலும் இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.