#28 Years of Indian இந்தியன் தாத்தாவை மீண்டும் அழைக்கும் நேரம் வந்துவிட்டது!

 
28YearsOfSenapathy

இந்தியன் படம் ரிலீஸாகி 28 ஆண்டுகள் ஆனதை வீடியோ வெளியிட்டு நினைவுக்கூர்ந்துள்ளது லைகா நிறுவனம்

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்த படம் இந்தியன். கடந்த 1996ம் ஆண்டு மே மாதம் 9ம் தேதி ரிலீசாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இப்படத்தில் இந்தியன் தாத்தாவான சேனாபதி தாபாத்திரம் ஊழலுக்கு எதிராக செய்த அனைத்தும் மக்களை வெகுவாக கவர்ந்தது. 


இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கமல்ஹாசனுக்கு கிடைத்தது. ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் ரிலீஸாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை நினைக்கூறும் விதமாக, லைகா நிறுவனம், இந்தியன் படத்திற்காக கமல் ஹாசன் தேசிய விருது பெற்ற வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு சேனாபதியை மீண்டும் அழைக்கும் நேரம் வந்துவிட்டது கம்பேக் இந்தியன் எனக் குறிப்பிட்டுள்ளது.