நயினார் நாகேந்திரனுக்கு 2ஆவது முறையாக சம்மன்

 
nainar

 தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியரிடம் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாருக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

tn

இதன் காரணமாக ₹4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கடந்த 22ஆம் தேதி  போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாள்கள் அவகாசம் கேட்டு வழக்கறிஞர் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார்.  நயினார் நகேந்திரனின் வழக்கறிஞர் தாம்பரம் ஆய்வாளர் பால முரளியை சந்தித்து கடிதத்தை வழங்கினார்.


tn

இந்நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் 2ஆவது முறையாக சம்மன் வழங்கினர்.  ஏற்கெனவே அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாத நிலையில் 2ஆவது முறை நேரடியாக சம்மன் வழங்கப்பட்டது; நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்களிடம் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.