ஓடை நீரில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு! திண்டிவனத்தில் சோகம்
திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் ஓடையில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் கிராமத்தில் ஓடை நீரில் மூழ்கி 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாவல் பழம் பறிக்கச் சென்ற சஞ்சய் (10), சகோதரிகள் பிரியதர்ஷினி(10), சுபஸ்ரீ(8) ஆகியோர் ஓடையைக் கடந்து செல்ல முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் ஓடையில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு: மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல்.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 7, 2024
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சஞ்சய், பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய 3 குழந்தைகள் ஓடை நீரில் மூழ்கி…
குழந்தையின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சஞ்சய், பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய 3 குழந்தைகள் ஓடை நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். குழந்தைகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
.


