சூளகிரி அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி!

 
accident

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி கிராமம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் 5 பேர் பயணம் செய்தனர். அதிவேகமாக சென்ற அந்த கார் திடீரென முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணம் செய்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் உடனடியாக  காரில் இருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

இந்த சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கிரிஷ்ணகிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.