கடலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிப்பு
Jul 15, 2024, 13:13 IST1721029431553
கடலூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காராமணி குப்பம் பகுதியில் உள்ள நெல்லிக்குப்பத்தில் தாய், மகன், பேரன் என மூன்று பேர் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்த ஐடி ஊழியர் சுதன்குமார், அவரது மகன் மற்றும் தாய் ஆகிய 3 பேர் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அறையிலும் ஒருவர் என மூன்று அறைகளில் மூவரும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில், உள்ளே 3 பேர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மூன்று பேர் மரணத்திற்கு காரணம் கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


