கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் பலி! கடவுளை வணங்கி சந்தியாவந்தனம் செய்தபோது சோகம்
திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் திருக்குளத்தில் இன்று அதிகாலை திருக்குளத்தின் படியில் அமர்ந்து கடவுளை வணங்கி சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த போது திருக்குளத்தில் தவறி விழுந்து பலியான மூன்று பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த சேலையூரில் அஹோபில மடத்திற்கு சொந்தமான குருகுலத்தில் பயின்று வரும் ஹரிகரன் (16), வெங்கட்ராமன்(17), வீரராகவன்(24) ஆகியோர், இன்று அதிகாலை திருக்குளத்தில் கடவுளை வணங்கி சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த போது அதில் ஒருவர் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். மேலும் அவர் உடன் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்த இருவர், அவரை காப்பாற்ற சென்றபோதும் அவர்களும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்,

அருகில் இருந்த மற்ற பயிற்சி மாணவர்கள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். பின்னர் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து தீயணைப்புத் துறையினரின் வரவழைத்து நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்கள் சடலங்களையும் மீட்டு திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. சித்திரை பிரம்மோற்ச விழாவில் பங்கேற்பதற்காக தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான அஹோபில குருகுலத்தில் பயின்று வரும் ஹரிகரன் (16), வெங்கட்ராமன்(17), வீரராகவன்(24) ஆகிய மூன்று பயிற்சி மாணவர்கள் வீரராகவ பெருமாள் கோவில் வளாகத்தில் தாங்கி கோவிலின் குருக்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளனர். இன்று அதிகாலை கோவில் திருக்குளத்தில் கடவுளை வணங்கி சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தபோது திருக்குளத்தில் தவறி விழுந்து பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


