குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி மேற்குவங்க தொழிலாளர்கள் 3 பேர் உயரிழப்பு

 
s s

குன்னூர் அருகே மண் சரிவில் சிக்கி மேற்குவங்க தொழிலாளர்கள் 3 பேர் உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சாரல் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இந்த  நிலையில் பூமி ஈரப்பதம் அடைந்துள்ளதால் தற்போது குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்திரா நகர், காந்திபுரம் பகுதியில் திடீர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மேட்டுப்பாளையம், உதகை செல்லும் வாகனங்கள் மூன்றாம் மாற்று பாதையான காட்டேரி, பாலாடா வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சாலையில் விழுந்துள்ள மண்சரிவை நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நீலகிரி - குன்னூர் அருகே கிணறு வெட்டும் பணியின்போது ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி மேற்குவங்க தொழிலாளர்கள் 3 பேர் உயரிழந்தனர். தீயணைப்புத் துறையினர் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்தனர்.