300 கிலோ எடையில் ரஜினிக்கு சிலை... தினமும் அபிஷேகம் செய்து வழிபாடு! அன்பை பொழியும் மதுரை ரசிகர்

 
ர் ர்

திருமங்கலம் ரஜினி ரசிகர், ரஜினிக்கு மூன்றரை அடி உயரத்தில் கருங்கல்லினால் ஆன 300 கிலோ எடை கொண்ட கருங்கல்லில் அவரது முழு உருவச் சிலையை உற்சவ மூர்த்தியாக குடும்பத்தினருடன் வழிபாடு செய்யும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள 50 வயதுமிக்க ரஜினியின் தீவிர ரசிகரும் , திருமண தகவல் மையம் நடத்தி வருபவரும் மற்றும் முன்னாள் ராணுவ வீரருமான கார்த்திக் என்பவர் தனது குடும்பத்துடன்,  வாடகை வீட்டில் ரஜினி கோயில் என்ற பெயரில் ரஜினிக்கு மூன்று அறைகள் அமைத்து,  முழுவதும் ரஜினி நடித்த படங்களிலிருந்து அவரது உருவங்களை படங்களாக ஒட்டி, வழிபட்டு வருவதுடன், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 250 கிலோ எடையில் கருங்கல்லிலான மூன்று அடி உயரம் கொண்ட ரஜினிக்கு சிலை அமைத்து , அதற்கு திருப்பாச்சி அமைத்து நாள்தோறும் அச்சிலைக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து குடும்பத்துடன் வழிபட்டு வருகிறார்.

இதேபோன்று ரஜினியின் 74-ஆவது ஆண்டு பிறந்த தினத்தை ஒட்டி,  நீண்ட நாள் கனவாக கார்த்திக் இரவு முதல் பாராது ரஜினிக்கு,  மூன்றரை அடி உயரத்தில் 300 கிலோ எடையில் கருங்கல்லினால் ஆன முழு உருவ சிலை அமைத்து அதனை உற்சவமூர்த்தியாக குடும்பத்துடன் வழிபட்டு வருகிறார். மேலும் அச்சிலைக்கு பால் ,பன்னீர், சந்தனம், பழ வகைகள், பூந்தி உள்ளிட்ட ஆறு வகையான அபிஷேகங்களை நடத்தியும், முன்னதாக யாகசால பூஜைகளும், ரஜினி பெயர் மற்றும் நட்சத்திரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் , ரஜினியின் நேரடி அழைப்புக்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.