மஹா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு!

 
up

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்த ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மேளா பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்பு உடைந்தது. அதிகாலை 2 மணிக்கு தடுப்பு உடைந்த நிலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம் அடைந்தனர். கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் மேளா ஷேத்ராவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 


காயம் அடைந்தவர்கள் யாரும் கவலைக்கிடமாக இல்லை பொறுப்பு அதிகாரி அகான்ஷா ரானா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி
 தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். 
  

News Hub