குருவாயூரப்பனுக்கு துர்கா ஸ்டாலின் சமர்ப்பிக்க உள்ள 32 பவுன் தங்க கிரீடம்?

 
தங்க கிரீடம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோவிலுக்கு தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று குருவாயூர் கோவில். கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில், தென்னாட்டின் துவாரகா என்றும், கிருஷ்ணர் பிறந்த இடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இதேபோல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். 

இந்த நிலையில், குருவாயூர் கோவிலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தங்க கிரீடத்தை காணிக்கையாக வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள,  32 சவரன் தங்க கிரீடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. நாளை மதியம் தங்க கிரீடத்தை துர்கா ஸ்டாலின் குருவாயூர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பார் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை துர்கா ஸ்டாலின் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.