"36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி" - அமைச்சர் மா.சு.தகவல்!!

 
ma subramanian

36 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Masu

சென்னை செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தமிழ்நாட்டின் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு அனுமதி கிடைத்துள்ளது.  ஸ்டான்லி மருத்துவமனைக்கு 5 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்களாக மாற்றும் கலந்தாய்வு துறை 4ம் தேதி தொடங்குகிறது. வழக்கின் விசாரணை ஜூலை 6ஆம் தேதி வருகிறது. இருப்பினும்  முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

masu

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். கேரளாவில் மர்ம காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் எல்லையோர மாவட்டங்களில் உள்ள 13 இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.கேரளாவில் காய்ச்சல் பரவினாலும் தமிழகத்தில் பெரும் பாதிப்பு இல்லை. இரு மாநில எல்லையில் 13 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது என்றார்.