"சிறார்களுக்கான 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன " - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

 
masu

போலியோ பாதிப்பே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

tn

தமிழகம் முழுவதும் வரும் 27ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் உட்பட 43,051 இடங்களில் போலியோ சிறப்பு முகாம் நடைபெறும் 5 வயதிற்குட்பட்ட 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும்; குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என்றும் அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளது. 

masu

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் 12-15 வயதுக்குள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். சிறார்களுக்கான 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன; தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், போலியோ பாதிப்பே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது; தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து போட வேண்டிய குழந்தைகள் எண்ணிக்கை 57,61,000 என்றும் தெரிவித்தார்.