அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களுடன் ஆலோசனை!

 
EPS , OPS

சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் 3வது நாள் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை  இன்று நடைபெற்று வருகிறது. பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. 

ops eps

இந்நிலையில் சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு  ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்துள்ளார்.  அதிமுக அலுவலகத்திற்கு வந்த ஓபிஎஸை தொண்டர்கள் ஆரவாரத்துத்துடன் வரவேற்றனர். 'கழகத்தின் காவலரே, ஒற்றை தலைமையே' என்ற கோஷத்துடன் ஓபிஎஸ்-ஐ தொண்டர்கள் வரவேற்றனர். 

eps

ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகம் சென்றுள்ள  நிலையில், ஈபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு  வரவில்லை . அதேசமயம் கிரீன்வேஸ் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை நடத்திவருகிறார். முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ, மோகன், பி.வி.ரமணா, விஜயபாஸ்கர், முக்கூர் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளனர்.