ஆர்சிபி அணி நிர்வாகம் மீது 3வது FIR

 
xs xs

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகம் மீது 3வது FIR போடப்பட்டது.

ஆர்சிபி மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் கைது!

பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன்  முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்ற நிலையில், வெற்றிக் கொண்டாட்டம்  சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐ.பி.எல் கோப்பையை  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வென்றதைக் கொண்டாடும் வகையில்,  கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் மாநில அரசு சார்பிலும், ரூ. 10 லட்சம் ஆர்சிபி அணி நிர்வாகம் சார்பிலும்  நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகம் மீது 3வது FIR போடப்பட்டுள்ளது. ஆர்சிபி நிர்வாகம் தரப்பில் இலவச அனுமதி என்று கூறியதால் தான் வந்ததாக புகார் மனுவில் குற்றஞ்சாட்டியுள்ளார். நுழைவாயில் 6ல் போதுமான பாதுகாப்பு வசதிகள் செய்யாததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. கூட்ட நெரிசலில் காயமடைந்த வேலு என்பவர் அளித்த புகாரின் பேரில் கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.