அமைச்சரவையில் உதயநிதிக்கு 3-வது இடம்

 
உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்


தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த  உதயநிதி ஸ்டாலினுக்கு,  தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. புதிய துணை முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். 

Image


இந்நிலையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், இரண்டாம் இடத்தில் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனும் உள்ளார். 4-வது இடத்தில் கே.என்.நேருவும், 5-வது இடத்தில் ஐ.பெரியசாமியும், 6-வது இடத்தில் பொன்முடியும் உள்ளார். உயர்கல்வித்துறை அமைச்சராக பொறிப்பேற்ற கோவி.செழியனுக்கு அமைச்சரவையில் 27-வது இடம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, பட்டியலில் 21வது இடமும்,  திதாக பதவியேற்ற அமைச்சர் ராஜேந்திரனுக்கு 19வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது உதயநிதி ஸ்டாலின் 10-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.