தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் - 4 பேர் கைது!!

 
ttn

கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 22ஆம் தேதி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் கரூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ,12-வார்டு உறுப்பினர்களும் வந்திருந்தனர் . அப்போது திமுக - அதிமுகவினர் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.  இதனால் தேர்தல் அலுவலர் மந்திராசலம் தேர்தலை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.  இதற்கு  அங்கிருந்த அதிமுகவினர்எதிர்ப்பு தெரிவித்ததுடன் தேர்தல் அலுவலரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரகளையில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 57 பேரை போலீசார் கைது செய்து அன்றிரவு விடுவித்தனர்.

admk-councillor-4-others-arrested-for-gheraoing-officers-car

இதுகுறித்து தேர்தல் அதிகாரி மந்திராசலம் தாந்தோனிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேர் மீது  சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், சட்டவிரோதமாக அதிகாரிகளை தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருவிக,  அவரது மகனும்  கரூர் ஒன்றிய குழு உறுப்பினருமான தமிழ்செல்வன் ,கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் ,தாந்தோணி கிளை செயலாளர் சுந்தர் ஆகிய 4 பேரை இன்று அதிகாலை தாந்தோனிமலை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தலை தள்ளிவைத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்காக  கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.